Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வைரலாகும் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.

varisu-movie-shooting-spot-video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி வாரிசு திரைப்படம் கோலாகலமாக வெளியானது. வம்சி இயக்கத்தில் குடும்ப திரைப்படமாக வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.

தற்போது வரை உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் குறித்த அப்டேட்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இப்படத்தில் விஜய் நடித்திருக்கும் காட்சிகளின் படப்பிடிப்பின் வீடியோ வெளியாகி உள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.