ரசிகர்களால் கொண்டாடப்படும் தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வாரிசு திரைப்படம் வெளியானது. தமன் இசையில் தில் ராஜு தயாரிப்பில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை விநியோகம் செய்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சூப்பரான கிரியேட்டிவிட்டியுடன் வித்தியாசமான வீடியோவை பகிர்ந்துள்ளது. அப்பதிவில், ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் குடும்ப புகைப்படங்களை வைத்து, வாட்ஸ் ஆப்பில் குடும்பம் என்னும் குரூப்பில் குடும்பத்தினர் மெசேஜ் மூலம் கொண்டாடுவது போல் வீடியோவை எடிட் செய்துள்ளது. மேலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கும் வாரிசு படத்திற்கு எல்லாம் இடங்களிலும் பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருவதாகவும், ‘இந்தப் பொங்கல் நமக்கு ஹவுஸ் ஃபுல் மா’ என்றும் விஜய் ஸ்டைலில் குறிப்பிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Unstoppable positive reviews storming everywhere for #BlockbusterVarisu ????
Indha pongal namakku HOUSEFULL ma ????#Thalapathy @actorvijay Sir @directorvamshi@SVC_official@MusicThaman @iamRashmika @Lyricist_Vivek@Jagadishbliss@TSeries#VarisuPongal #Varisu pic.twitter.com/OZJqWE5dHg— Seven Screen Studio (@7screenstudio) January 13, 2023