தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான திகழும் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனாவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்க தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழில் நேற்றைய முன் தினம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இன்று இப்படம் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படம் வெளியான இப்படம் தமிழ் ரசிகர்களை தொடர்ந்து ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் வாராசுடு என்ற தலைப்புடன் நாளை தெலுங்கிலும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
#Vaarasudu in theaters from tomorrow ❤️????????❤️???? already blockbuster hit in both Tamil & # Hindi ???????? let’s wait and see telugu response ????#VarisuPongalWinner #varisu #VarisuPongal2023 #VarisuHindi #VarisuHindiFromToday #VarisuBlockbuster #VarisuPongalWinner pic.twitter.com/XOzIIR3FPF
— Sathishvijay006 (@sathishvijay006) January 13, 2023

