Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்

varisu-first-single-release-date details

தென்னிந்திய திரை உலகில் இளைய தளபதி ஆக வளம் வருபவர் தான் விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், யோகி பாபு, குஷ்பூ, பிரபு, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் வெளியாகாததால் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு படக்குழு ஆறுதலாக வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு இருந்தனர். ஏனெனில் பாடலுக்கான டெக்னீசியன் பணிகள் முடிக்கப்படாமல் இருந்ததால் இது தள்ளி போனதாக கூறப்படுகிறது, தற்போது அப்பணிகள் நிறைவு பெற்றதால் வரும் நவம்பர் 4 ஆம் தேதி வாரிசு முதல் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமன் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை தளபதி விஜய் பாடியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

varisu-first-single-release-date details
varisu-first-single-release-date details