Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரம்மாண்டமாக ரெடியாகும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா செட். வைரலாகும் புகைப்படம்

varisu-audio-launch-set-thaman-photo

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தமன் இசையில் அண்மையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து வரும் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது.

2 ஆண்டுகளாக இசை வெளியீட்டு நிகழ்வுகளில் விஜய் குட்டி ஸ்டோரி சொல்லாத நிலையில் அவர் சொல்ல இருக்கும் புதிய கதையைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழாவின் செட்டில் பரபரப்பான வேலைகளுடன் இருக்கும் ஓர் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இதனால் ஆடியோ லான்ச் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.