Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகனுக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பு, வாழ்த்து தெரிவித்து வனிதா போட்ட பதிவு

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவரது மகள் வனிதா விஜயகுமார் சந்திரலேகா படத்தில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து மூன்று திருமணங்கள் செய்து அதை அனைத்தையும் தோல்வியில் முடிவடைந்து தற்போது மீண்டும் அடுத்த இன்னிங்சை தொடங்கி பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது மூத்த மகன் விஜய் ஹரி ஸ்ரீ தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது இவருக்கு முதல் திரைப்படம் என்பதால் வனிதா விஜயகுமார் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் மகனுக்கு வாழ்த்து கூறிய பதிவு செய்துள்ளார். மேலும் தனது மகனுக்கு உறுதுணையாக இருந்த ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் சந்தோஷத்தில் தனது கண்கள் கலங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

வனிதாவின் மகன் விஜய் ஹரி ஸ்ரீ தனது தந்தையுடன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vanitha (@vanithavijaykumar)