Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதாவின் முதல் பதிவு.. வைரலாகும் தகவல்

Vanitha Tweet After Bigg Boss Ultimate

தமிழ் சின்னத் திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி 5வது சீசனை தொடர்ந்து ஹாட்ஸ்டார் இல் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருந்த வனிதா விஜயகுமார் சக போட்டியாளர்களுடன் தொடர்ந்து முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

மேலும் தன்னுடைய உடல் நிலை மனநிலை தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம் என அவர் வீட்டில் இருக்கும்போதே கூறியிருந்தார். ஆனால் கமல்ஹாசன் விலகிக்கொண்ட ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது வனிதா விலக காரணம் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த வனிதா விஜயகுமார் ரம்யா கிருஷ்ணன் வருவதன் காரணமாக நான் இதில் இருந்து விலகவில்லை. பொய்யான தகவலை பரப்பாதீர்கள். என்னுடைய உடல்நிலை மனநிலையை கருத்தில் கொண்டுதான் நான் இந்த முடிவை எடுத்தேன். என்னுடைய நிலையை புரிந்து கொண்டு அதற்கு உதவிய ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கும் பிக்பாஸ் அல்டிமேட் தயாரிப்பு நிறுவனத்திற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.