Vanitha Complaint on Bigg Boss Ultimate
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசன் வெற்றியைத் தொடர்ந்து ஹாட் ஸ்டார் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா விஜயகுமார் கமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உடல்நிலை காரணமாக அவர் வெளியேறிவிட்டார்.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். வெளியே வந்த அவர் இந்த நிகழ்ச்சி சரியான பாதையில் செல்லவில்லை அதனால்தான் கமல்ஹாசனும் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டார் என கூறினார்.
இப்படியான நிலையில் தற்போது இதுவரையிலான எபிசோடுகளை பார்த்த வனிதா விஜயகுமார் பல இடங்களில் நான் பேசியவை நீக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். இருபத்தி நான்கு மணி நேரமும் லைவ் என்றுதானே சொல்லிவிட்டு ஆனால் நான் பேசியவை பல இடங்களில் இடம்பெறவில்லை என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்றாலும் இதிலும் தொலைக்காட்சி சேனல் விருப்பப்படி எடிட்டிங் செய்யப்படுகிறது என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…