Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வணங்கான் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் பதிவு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் வணங்கான். பாலா இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் சூர்யா திடீரென வெளியேறினார்.

இதையடுத்து சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் இந்த படத்தில் நடிக்க தொடங்கினார். போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது, வரும் ஜூலை எட்டாம் தேதி வணங்கான் படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Arun Vijay (@arunvijayno1)