valimai ticket booking
நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
‘வலிமை’ படத்தின் பணிகள் முடிந்து பொங்கலுக்கு திரையரங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. கொரோனா 3ஆம் அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு ‘வலிமை’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி (வியாழன்கிழமை) திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பல நாட்களுக்கு பிறகு திரையரங்கில் இப்படம் வெளியாக இருந்தாலும் ரசிகர்கள் எந்த ஒரு சோர்வும் இல்லாமல் படம் பார்ப்பதற்காக ஆர்வத்தோடு நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.
வலிமை திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு இப்படம் இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…