தல அஜித் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.
போனி கபூர் தயாரிப்பில் தயாராகி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் என பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான், இப்படத்தின் First லுக் மோஷன் போஸ்டர், மற்றும் முதல் பாடல் வெளியானது.
First லுக் மற்றும் முதல் பாடல் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வலிமை படப்பிடிப்பு தளத்தில் இருந்து சண்டை காட்சிகளின் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
இந்த காட்சியில் First லுக் மோஷன் போஸ்டரில் கூட வந்திருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கூட, இது செம மாஸ் சீன் ஆக இருக்கும், என்று கூறி வந்தனர்.
ஆனால், தற்போதே அந்த சீனின் சில படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..