தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மேலும் ஜூ5 இணைய தளத்தில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் பிறந்த நாள் விருந்தாக மே ஒன்றாம் தேதி இந்த படத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
