Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்

Valimai Movie Premier Telecast Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து ஜீ5 இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக இத்திரைப்படம் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள் விருந்தாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதேபோல் இதே தினத்தில் அஜித் நடித்து வரும் அடுத்த படமான ajith 61 ஒன்று படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.