எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா, ஹுமா குரேஷி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் முதல் பாடல் ‘நாங்க வேற மாரி’ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அதே போல் இப்படத்தின் Glimpse வீடியோவும் ,வெறித்தனமாக தல அஜித்தின் ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் நடிகர் அஜித் சமீபத்தில் வலிமை படத்தை பார்த்துள்ளாராம். அதில் வரும் ரேஸ் மற்றும் பைக் சம்மந்தப்பட்ட காட்சிகள் அருமையாக வந்திருக்கிறதாம். படத்தை பார்த்துவிட்டு அஜித் சந்தோசம் அடைந்ததாவும், படமும் சிறப்பாக இருப்பதாக படக்குழுவை அஜித் பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், வரும் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் வலிமை படத்தை பார்க்க அஜித்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், சக சினிமா ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

