Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்க்கு முன்பே களமிறங்கும் அஜித்

vaimai and beast release update

வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நாயகியாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 13 ஆம் தேதி பொங்கலையொட்டி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவதாக இருந்தது.

ஆனால், கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக படத்தினை ஒத்திவைப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். இதனால், அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இன்னும் ‘வலிமை’ வெளியீட்டுத் தேதியை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில், ‘வலிமை’ படத்தினை வரும் மார்ச் மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் ‘பீஸ்ட்’ வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையையொட்டி வெளியாவதால் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த ‘வலிமை’ படத்தை, அதற்கு முன்னரே மார்ச்சில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.