கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் வடிவேலு. இவர் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் இவர்களுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு பாடலை நடிகர் வடிவேலு பாடி இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஏ ஆர் ரகுமான் வெளியிட்டு இருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், மாமன்னன் படத்திற்காக வைகைப்புயல் வடிவேலு குரலில் ஒரு பாடலை பதிவு செய்தோம், பாடல் பதிவின்போது அவர் எங்களை முழுவதும் சிரிக்க வைத்தார் மற்றும் இந்தப் பாடல் பதிவை மறக்க முடியாததாக மாற்றினார். என புகைப்படங்களுடன் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram