vadivelu about varisu and thunivu movie
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று இரவு சென்றார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று இரவு சென்றார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த வடிவேலுவை ரசிகர்கள், பக்தர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அவருடன் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது, என்ன மனக்குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தால் அவை நீங்கிவிடும். நான் எந்த கட்சியிலும், கூட்டணியிலும் இல்லை. என் கூட்டணி காமெடி நடிகர்கள் வந்தால் இணைந்து நடிக்க வேண்டியதுதான். மாமன்னன், சந்திரமுகி-2, விஜய் சேதுபதியின் புதிய படம் என நிறைய படங்களில் நடித்து வருகிறேன். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெற்றிகரமாக 3-வது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். பலரும் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக எனக்கு போன் செய்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்த படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் மீண்டும் திரைக்கு வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாரிசு, துணிவு ஆகிய இரு படங்களுமே வெற்றியடைய வேண்டும். அதேபோல் எல்லா படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும். சினிமா நன்றாக இருந்தால் தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும். அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம். இவ்வாறு வடிவேலு கூறினார்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…