Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாத்தி படத்தின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்

vaathi-movie-unseen-photos

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாத்தி” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அன்சீன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.