Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

vaathi-movie-grand-audio-launch details

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வாத்தி’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இரண்டாவது பாடல் நாளை வெளியாக இருப்பதாக பட குழு தெரிவித்துள்ளது.

இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.