தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக வாத்தி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகி உள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்து வரும் நிலையில் தற்போது முதல் சிங்கிள் குறித்து பதிவை பதிவு செய்துள்ளார்.
இது குறித்த அவரது பதிவில் தனுஷின் வரிகளில் முதல் சிங்கிள் ட்ராக் வெகுவிரைவில் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
First single of #vaathi soon … written by our poet @dhanushkraja … a love song … #sir #vaathi #venkyatluri @SitharaEnts
— G.V.Prakash Kumar (@gvprakash) October 29, 2022