மாஸ்டர் எப்போது வருவார் என அனைத்து விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். விரைவில் கொரோனா நிலைமை சரியாகி படம் தீபாவளிக்கு வெளியாகிவிடும் என்ற நம்பிக்கைரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் இருக்கிறது.
படம் வெளியாகும் முன்பே குட்டி ஸ்டோரி பாடல் இணையதளத்தில் வெளியாகி இதுவரை 63 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது வாத்தி கம்மிங் பாடலும் 60 மில்லியன் பார்வைகளை எட்டி சாதனை படைத்துள்ளது.
வாத்தி கம்மிங் பாடல் பலரையும் ஆடவைத்தது. டிக் டாக் போன்ற தளத்தில் அதிகமானோர் நடனமாடி வீடியோவை பகிர்ந்ததை மறக்கமுடியுமா.

