நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்த ‘ஹாட்ஸ்பாட் 2மச்’ படத்தின் அப்டேட்ஸ்!
‘ஹாட்ஸ்பாட்’ படத்தின் முதல் பாகத்தில் நிறைய கசமுசா கதைகளை வைத்திருந்தார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். கால் கேர்ள் மாதிரி கால் பாய் கதையை வைத்து அவர் இயக்கியது சர்ச்சையை கிளப்பியது. முதல் படம் ஓடாத நிலையிலும், அதற்கு கிடைத்த பாராட்டுக்கள் காரணமாக 2-வது பாகத்தை ‘ஹாட்ஸ்பாட் டூமச்’ என்கிற டைட்டிலில் இயக்கியுள்ளார். இப்படம் ஜனவரி 23-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் கள்ளக் காதலை ஆதரிக்கிறீங்களா என கேள்வி எழுப்ப, ‘காதலில் எது சார் நல்ல காதல், கள்ளக் காதல்’ என்றார்.
கரூர் சம்பவத்தை மையமாக வைத்து சில காட்சிகள் உருவாக்கி இருக்கீங்களா? என்கிற கேள்விக்கு, ‘இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே நிறைவடைந்து விட்டது. படத்தின் கதை 2023-ம் ஆண்டே லாக் செய்யப்பட்டு ரெஜிஸ்டர் ஆகிவிட்டது. அதற்கும் இந்த படத்துக்கும் சம்பந்தமில்லை என்றார். மேலும், விஜய்யை கலாய்த்து காட்சிகள் வச்சிருக்கீங்க, அவருடைய தெறி ரீ ரிலீஸ் தள்ளிப்போய் தான் உங்க படத்துக்கு உதவி இருக்கு என்கிற கேள்விக்கும், இது முழுக்க முழுக்க கற்பனை தான். சூப்பர் ஸ்டார் கூட பபுள் கம் தட்டி வாயில் போடுவார், சிவாஜி படத்தை பார்க்கவில்லையா என்றார்.
விஷ்ணு விஷால் ஏன் வரல?: சிவகார்த்திகேயன் 2050-ல் சிஎம் ஆகியிருப்பதாக கற்பனையாக படத்தை எடுத்து வச்சிருக்கீங்க, அதனால் தான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் எந்த புரமோஷனுக்கும் வரவில்லையா? என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ‘இந்த படம் முதலில் ஜனவரி 30-ம் தேதி ரிலீஸ் என திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், விஜய் சார் படம் வெளியாகாத நிலையில், முன்கூட்டியே ரிலீஸ் பண்றோம். விஷ்ணு விஷால் சார் வேறு ஒரு படத்தில் பிசியாக உள்ளதால் அவரால் புரொமோஷனுக்கு வரமுடியவில்லை’ என்றார்.


