Updates on the audio launch of the film Parasakthi, which fans have been waiting for..!
ரசிகர்கள் எதிர்பார்த்த பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்ஸ்..!
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப்படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதனிடையில் ஜனநாயகன் ஆடியோ லான்ச் டிசம்பர் 28-ந்தேசி மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா அப்டேடிற்காக ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர்.
‘பராசக்தி’ பட ஆடியோ லான்ச்சை ஜனவரி முதல் வாரத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சிவகார்த்திகேயனின் சொந்த ஊரான திருச்சி அல்லது மதுரையில் ஆடியோ லான்ச்சை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘பராசக்தி’ படம் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களை நடத்தும் கல்லூரி மாணவர்களை ஒன்றிணைக்கும் பிரதிநிதியாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் முதன்முறையாக ரவி மோகன் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். மேலும், தெலுங்கு நடிகர் ராணா, அத்ர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் ‘கோட்’ படத்தை தொடர்ந்து சயின்ஸ் பிக்சன் ஜானரில் ‘எஸ்கே-26’ படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
விஜய் பற்றிய கேள்வி, நடிகர் கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து! கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்,…
'பராசக்தி' படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’…
‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி பாலா இயக்கத்தில் வெளியான 'வணங்கான்' படத்தில் சிறந்த நடிப்பை…
மக்களைத் தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச்…
'ஜெயிலர் 2' - சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’…
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் உள்ளது. புதிதாக…