தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்காக சூர்யா சென்னையில் காளை மாடுகளுடன் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதுவரை இந்த படத்தில் சூர்யா நடிக்கிறார் என்பதை தவிர வேறு எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முதல் முறையாக ஆண்ட்ரியா நடிகர் சூர்யாவுடன் ஜோடி போட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆண்ட்ரியா இதற்கு முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…