மலையாளத் திரையுலகில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பிரேமம்.
சாய் பல்லவிக்கு அறிமுகப் படமான இந்தப் படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி அங்கும் வெற்றியைக் கண்டார். அதன் பின்னர் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
சாய்பல்லவிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த திரைப்படமாக்க பிரேமம் இருந்து வருகிறது. ஆனால் முதலில் இந்தப் படத்தில் சாய்பல்லவி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது அசின் தானாம்.
கடைசி நேரத்தில் அவரால் படத்தில் நடிக்க முடியாமல் போக அதன் பிறகுதான் இந்த வாய்ப்பு சாய்பல்லவிக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.
