மாஸ்டர் படம் உருவாவதற்கான முக்கிய காரணம் என்ன? இது யாரால் சாத்தியம் என்பது குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ் ஸ்ரீநாத், பிரேம் குமார் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.
தளபதி விஜய் மட்டும் இந்த ஒரு விஷயத்தை செய்திருந்தால் நிச்சயம் மாஸ்டர் படம் உருவாகி இருக்காது என தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது விஜய் பிகில் படத்தை முடித்தவுடன் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
மகிழ்திருமேனி இடம் கதையைக் கேட்டு ஓகே செய்துள்ளார். அனைத்தும் கூடி வரும் நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் தனக்கு ஒரு கதையை கூறி அட்வான்ஸ் வாங்கி விட்டீர்கள் அல்லவா அந்த படத்தை முடித்துக் கொடுத்து விட்டு வேறு ஒரு படத்திற்கு செல்லுங்கள் என கண்டிஷன் போட்டுள்ளார்.
இதன் காரணமாக வேறு வழி இல்லாமல் மகிழ்திருமேனி உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளார்.
இதனால் தான் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இருக்கு வாய்ப்பு கொடுக்க மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த மாஸ்டர் திரைப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் படத்திற்கு அடுத்ததாக விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு பிறகு நிச்சயம் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…