Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவிற்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

unknown-secrets-of-jillunu-oru-kadhal Movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் சிறுத்தை சிவா ஞானவேல் இயக்குனர் அலுவலகம் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார்.

இவரது நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் பூமிகா என இருவர் நடித்திருந்தனர்.

தற்போது பூமிகா நடித்திருந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக முதன்முதலாக நடிக்க இருந்த நடிகை குறித்து தெரிய வந்துள்ளது. ஆமாம் இந்த கதாபாத்திரத்தில் முதலில் அசின் தான் நடிக்க இருந்துள்ளார். சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக அதன் பின்னரே இந்த வாய்ப்பு பூமிகாவுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

unknown-secrets-of-jillunu-oru-kadhal Movie
unknown-secrets-of-jillunu-oru-kadhal Movie