udhayanidhi-tweet-about-mari-selvaraj-vaazhaiudhayanidhi-tweet-about-mari-selvaraj-vaazhai
தமிழ் சினிமாவில் பிரபல விநியோகிஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமைகளுடன் வளம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். முன்னணி நடிகராகவும் கலக்கி வரும் இவர் தற்போது அரசியலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அதனால் படங்களில் நடிப்பதை தவிர்க்க இருக்கும் இவர் தனது கடைசி படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
பகத் பாஸில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் கடந்த 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும், திரை பிரபலங்கள் மதியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக ‘வாழை’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் சிறுவர்களை மையப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தை குறிப்பிட்டு நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
அதாவது, மாமன்னன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு இருந்த மாரி செல்வராஜின் பதிவிற்கு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், “வாழை உங்களின் சிறந்த படைப்பு, மீண்டும் உங்கள் மேஜிக்கை பார்க்க காத்திருக்கிறேன்” . நன்றி, லவ் யு என குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் வாழை படம் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…