udhayanidhi-stalin-twitter-post
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் சாதியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படத்திற்கு எதிராக சில கருத்துக்கள் இருந்தாலும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும் திரை பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அரசியலில் முழு கவனத்தை செலுத்த இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கடைசியாக நடித்திருக்கும் படமாக இப்படம் இடம்பெற்று இருப்பதால் இதனை மறக்க முடியாத அளவிற்கு இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜுக்கு உதயநிதி ஸ்டாலின் மிகவும் காஸ்ட்லியான காரான மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
அப்புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் உதயநிதி அவர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை. என படம் தொடர்பாக வெளியாகும் கருத்துக்களை குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…
பாலிவுட்டின் மூத்த நடிகரும், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவருமான நானா படேகர் தனது 75வது வயதில் காலமானார். கோவாவின்…
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran