Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாமன்னன் படம் குறித்து உதயநிதி வெளியிட்ட தகவல்.. இணையத்தில் வைரலாகும் பதிவு

udhayanidhi-maa-mannan-movie-details

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வித்தியாசமான கதைகளை இயக்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இயக்குனர்தான் மாரி செல்வராஜ். இவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் தான் ‘மாமன்னன்’ இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தில் வடிவேலு, பகத் பாஸில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த தற்காக படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அதன் பின் உதயநிதி ஸ்டாலின் அவரின் சமூக வலைதள பக்கத்தில் இப்படத்திற்கான இரண்டாவது கட்ட படப்பிடிப்பு முடிந்தது, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் தேதி கொடுத்தால் தான் நடைபெறும் அதைப்பற்றி கொஞ்சம் யோசிங்க! மாரி செல்வராஜ் சார் ஒன் மோர் காட்சிகளுக்கு சாரி!.நன்றி “மாமன்னன்” படக்குழு! என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.