Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திமுக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு தரவில்லை.. விஜய் வெளியிட்ட வீடியோ..!

tvk thalapathy Vijay wishes to womens day

மகளிர் தினத்திற்கு விஜய் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து H வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் ஜனநாயகம் என்ற படத்தில் நடித்த வருகிறார். இது இவருடைய கடைசி படம் என்பது அனைவருக்கும் தெரியும் அதனைத் தொடர்ந்து அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு பிரம்மாண்டமாக நடந்தது. இந்தநிலையில் நேற்று விஜய் இஸ்லாமிய நண்பர்களுடன் இப்தார் நோன்பு திறக்கும் விழாவில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தற்போது இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் என்னுடைய அம்மா, அக்கா தோழி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்றும் ஒரு அண்ணனாக மகனாக தோழனாக நான் நிற்பேன் என்று கூறியுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் தமிழகத்தை ஆண்டு வரும் திமுக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு தரவில்லை 2026 இல் இந்த அரசை மாற்றி அமைப்போம் என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.