Categories: Health

மருத்துவகுணம் மிக்க மஞ்சள் என்னென்ன வியாதிகளை குணப்படுத்தும் தெரியுமா?

மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊற வைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.

மஞ்சளுக்கு ஒருவிதமான வாசனை உண்டு. பலவகையான சமையல் பதார்த்தங்களுடன் மஞ்சளைச் சேர்ப்பது நம் நாட்டுப் பழக்கம். நாம் உண்ணும் பதார்த்தங்களுடன் விஷக்கிருமிகளும் கலந்திருக்கும். இந்த விஷக்கிருமிகளை அழிப்பதற்காகத்தான் மஞ்சளை பதார்த்தத்துடன் சேர்க்கின்றனர்.

ஜலதோஷம், சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மஞ்சளைச் சுட்டு அதில் வரும் புகையை நுகர்ந்தால் விரைவில் குணமாகும்.

மஞ்சளை அரைத்து, இரவில் கை, கால், முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு கை, கால், முகத்தில் முடி வளர்வது நின்று விடும்.

மரமஞ்சள் கட்டைகளை இடித்து, தூளாக்கி 5 கிராம் அளவு தூளை 2 டம்ளர் நீரில் இட்டு ஊற வைத்து 1 டம்ளராக குறையும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் நாக்குச் சுவையின்மை குணமாகும்.

மரமஞ்சள் கட்டையை நீர் விட்டு அரைத்து தலை, உடலில் பூசி அரை மணிநேரம் ஊறவைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்க உடல் வெப்பம் குறையும்.

குளிக்கும் நீரில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து சிறிது நேரம் கழித்து குளித்தால் உடலில் வியர்வை நாற்றம், அரிப்பு போன்றவை ஏற்படாது.

தினமும் குளிப்பதற்கு முன் சிறிதளவு மஞ்சள் தூளை எடுத்து அத்துடன் சிறிதளவு பால் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் ஒரு பேக் போல் போட்டு அரை மணிநேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகம் பளிச்சிடும்.

admin

Recent Posts

சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…

12 hours ago

வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் சரண்யா..!

தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…

12 hours ago

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

18 hours ago

மீனாவுக்கு வந்த புது ஐடியா, ரோகினியை திட்டும் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

19 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

21 hours ago

டாஸ்கில் தீயாக விளையாடும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

21 hours ago