மாடலிங் நடிகையாக தனது பயணத்தை தொடங்கி அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியலில் ராதிகாவின் மகளாக யாழினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷனா.
அதன் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில் புதிய சீரியல் காரணமாகவே அவர் விலகி உள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஆமாம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றில் தர்ஷனா நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். வெகு விரைவில் அவரது சீரியல் குறிப்பிட்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ts-dharsha-in-new-serial update