Trouble with the censor board – tension in the Janyayan film crew
தணிக்கைக் குழுவில் சிக்கல் – ஜனநாயகன் படக்குழு பதற்றம்
விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் தணிக்கைப் பணிகள் தொடங்கின. இதனைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் கூறியிருக்கிறார்கள். இதன் பணிகளை முடித்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பவுள்ளது படக்குழு.
முக்கியமாக சண்டைக் காட்சிகளில் ரத்தம் தெறிப்பதை குறைக்கச் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பணிகள் இன்றுடன் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டமாக ‘ஜனநாயகன்’ ட்ரெய்லரை வெளியிடலாம் என படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
படத்தில் விஜய் உடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கெளதம் மேனன், பிரியாமணி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.என்.நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணிபுரிந்துள்ளார். மலேசியாவில் நடைபெற்ற இப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்வுகள் தற்போதும் ரசிகர்களால் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…