பிரபாஸ் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்.. மனம் திறந்து பேசிய பிரபாஸ்

பிரபாஸ் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்.. மனம் திறந்து பேசிய பிரபாஸ்

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் இந்திய அளவில் வரவேற்பு பெற்று ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் நடித்த பிரபாஸும் அனுஷ்காவும் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. பின்னர், இது வதந்தி என தெரிய வந்தது.

இந்நிலையில் தற்போது பிரபாஸ், ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இந்த ஹாரர்-நகைச்சுவை திரைப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் ஜனவரி10-ந்தேதி வெளியாகிறது. மற்ற மொழிகளில் 9-ந்தேதி வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தொகுப்பாளினி, பிரபாஸிடம் ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்டார். ஒரு ரசிகர், ‘பிரபாஸை மணக்க விரும்பினால் எப்படி இருக்க வேண்டும்?’ என எழுதப்பட்ட ஒரு பதாகையைக் காட்டினார். அவர் அதே கேள்வியை பிரபாஸிடம் கேட்டார். அதற்கு பிரபாஸ் ஒரு அதிர்ச்சியூட்டும் பதிலைக் கொடுத்தார். ‘அந்த உண்மை தெரியாமல்தான் நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என கூறினார்.

This is the reason why Prabhas did not get married.. Prabhas opened up
dinesh kumar

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

3 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

3 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

3 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

3 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

3 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

21 hours ago