தமிழ் சினிமாவில் சைடு ரோலில் நடிக்க ஆரம்பித்து தற்பொழுது டாப் ஹீரோயின் களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. இவர் சிம்ரனுக்கு தோழியாக ஜோடி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர் விக்ரமின் சாமி, விஜயின் கில்லி போன்ற படங்களின் மூலம் முன்னணி நடிகையாக திகழ ஆரம்பித்தார்.
அதன் பிறகு பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வர ஆரம்பித்த நடிகை திரிஷா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நிறைய படங்கள் நடிக்க ஆரம்பித்தார். தற்பொழுது டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருக்கிறார்.
எப்பொழுதும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை திரிஷா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வரும். அந்த வகையில் தற்பொழுது இரண்டு வித்தியாசமான பதிவுகளை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒன்று அவரது அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் வகையில் சிறுவயதில் அவரது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
