தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் குந்தவையாக நடித்து முடித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகை திரிஷா அப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் கார்த்தியுடன் சாட்டிங் செய்துள்ள பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘அக நக’ என்னும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவனாக ட்விட்டர் பக்கத்தில் ‘தங்களது தரிசனம் கிடைக்குமா?’ எனக் குந்தவையாகிய திரிஷாவிடம் பதிவின் மூலம் கேள்வி கேட்க அதற்கு ‘ம்ம்.. யோசித்து செய்தி அனுப்புகிறேன்’ என திரிஷாவும் பதில் அளித்திருக்கிறார். இவர்களது இந்த காமெடியான பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.
என்ன வாணர்குல இளவரசே? https://t.co/k9n6EYyGES
— Trish (@trishtrashers) March 20, 2023
ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன் https://t.co/h62Z1d9IMR
— Trish (@trishtrashers) March 20, 2023

