Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நான் ரெடி”செல்வராகவன் பதிவுக்கு த்ரிஷா போட்ட பதிவு

கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் திரிஷா மற்று வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2008-ஆம் ஆண்டு இப்படம் தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில், தனுஷ், நயன்தாரா, ரகுவரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதுவும் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே
இதனிடையே, கடந்த 2013-ம் ஆண்டு செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘நீண்ட நாட்களுக்கு பின்னர் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’ திரைப்படத்தைப் பார்த்தேன். வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாகம் எடுக்கவும் தயார்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் செல்வராகவனின் ட்வீட்டுக்கு நடிகை த்ரிஷா ‘நான் ரெடி’ என பதிலளித்துள்ளார். இந்தபதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.