Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தால் விஜய்க்கு வந்த சிக்கல். பிரபல விநியோகிஸ்தர் கடிதம்

trending-news-abou-dil-raju-and-varisu

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடம்பள்ளி இயக்கத்தில் வெளிவந்து வெற்றியை பெற்ற திரைப்படம் வாரிசு.

இந்த படத்தில் தளபதி விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாக சொல்லப்பட்டது.

தமிழகத்தில் வாரிசு திரைப்படம் மிகப்பெரிய அளவில் லாபத்தை கொடுத்ததாகவும் தகவல் வெளியான நிலையில் கேரளா விநியோகிஸ்தர் ராய் என்பவர் இந்த படத்தால் எனக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தில் ராஜுவிடம் இதுகுறித்து பேச அவர் பணம் தர முடியாது என மறுத்து விட்டதாக தெரிவித்துள்ள இவர் தற்போது விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். லியோ திரைப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் விநியோகஸ்தர் இவ்வாறு கூறியிருப்பது விஜய்க்கு புது சிக்கலை உருவாக்கி உள்ளது.

trending-news-abou-dil-raju-and-varisu
trending-news-abou-dil-raju-and-varisu