‘வா வாத்தியார்’ படத்தின் டிரெய்லர்..” ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘ஹாப்பி ராஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘வா வாத்தியார்’ படத்தின் டிரெய்லர்..” ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘ஹாப்பி ராஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கார்த்தி மற்றும் ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தின் தகவல்கள் பார்ப்போம்..

கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாகவுள்ளது.

சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘வா வாத்தியார்’ பட டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பிளாக்மெயில்’ ஆகும். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியிருந்தார். கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்திருந்தார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு மற்றும் இயக்குநர் குறித்து நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trailer of the movie ‘Vaa Vaathiyaar’.. “G.V.Prakash’s next film is titled ‘Happy Raj’.
dinesh kumar

Recent Posts

தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு!

தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…

1 hour ago

போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல்

போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்​துள்ள ‘கருப்​பு’…

1 hour ago

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை… ரசிகர்களுடன் ‘கொம்பு சீவி’ படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…

2 hours ago

’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…

2 hours ago

‘வா வாத்தியார்’ எப்போது ரிலீஸ்?

'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…

2 hours ago

காஞ்சனா பட நடிகைக்கு ஏற்பட்ட கார் விபத்து..வெளியான தகவல்.!!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…

5 hours ago