Categories: Movie Reviews

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது.

படத்தின் முதல் பாதியில் யஷ் (ராயா) அறிமுகமாகும் விதம், அவரது வித்தியாசமான தோற்றம் மற்றும் அடுத்தடுத்து இடம்பெறும் எலிவேஷன் காட்சிகள் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன. பழிவாங்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு நகரும் இப்படத்தில், யஷ் மற்றும் நயன்தாரா இணைந்து வரும் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய 15 நிமிடங்கள் நயன்தாராவின் அதிரடியான காட்சிகளால் படத்தின் வேகம் மேலும் அதிகரிக்கிறது.

கியாரா அத்வானி இடம்பெறும் சர்க்கஸ் காட்சிகள் பார்வைக்கு விருந்தாக அமைந்துள்ளன. அதேபோல், ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும், ‘தபாஹி’ பாடலின் காட்சியமைப்பும் படத்தின் பலமாக அமைந்துள்ளன.

படம் தொடங்கியதிலிருந்தே ‘சர்க்கஸ் ஃபைட்’, ‘லேடீஸ் ஃபைட்’ என தொடர்ச்சியான ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெறுகின்றன. சில இடங்களில் வன்முறை காட்சிகள் அதிகமாகவும், சற்று ஓவராகவும் இருப்பது அசெளகரியத்தை ஏற்படுத்தினாலும், ஒட்டுமொத்தமாக முதல் பாதி சுவாரஸ்யமான வேகத்தில் நகர்கிறது. சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் நீளமுள்ள இப்படத்தில் யஷ் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘கே.ஜி.எஃப்’ படங்களுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்துள்ள யஷ், தனது தனித்துவமான உடல்மொழி, ஆக்ரோஷமான தோற்றம் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு ஜோடியாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி தங்களது கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர்.

மாஃபியா தலைவியாக வரும் ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோரும் தங்களது துறுதுறுப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கின்றனர்.

ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு படத்தின் மற்றொரு பலம். கோவாவின் பழமையான தெருக்கள், பிரம்மாண்டமான அரங்குகள் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா மற்றும் தனிஷ்க் பாக்சி ஆகியோரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு தேவையான மாஸ் உணர்வை வழங்குகின்றன.

ஜே.ஜே. பெர்ரி மற்றும் அன்பறிவ் வடிவமைத்துள்ள சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் அனல் பறக்கின்றன. ஆக்‌ஷன், மாஸ் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’, யஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது.

Suresh

Recent Posts

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

3 hours ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

3 hours ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

3 hours ago

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…

4 hours ago

வெப் தொடரில் திரிஷா; நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய தொடர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…

4 hours ago

“கலாச்சாரம் உடையில் இல்லை; உணர்வில்தான் உள்ளது!” – கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதிலடி

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கிருத்தி சனோன், தனது ஆடைத் தேர்வு குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அளித்துள்ள பதில் தற்போது…

4 hours ago