Do You Know How Much Nayanthara Earned as Her First Salary
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என பல்வேறு பரிமாணங்களில் ரசிகர்களை கவர்ந்து வரும் அவர், திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதியும், ‘ஹாய்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ஆம் தேதியும் வெளியாக உள்ள நிலையில், நயன்தாராவின் ஆரம்ப கால திரைப்பயணம் குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முதல் சம்பளம் குறித்து பேசிய நயன்தாரா, “சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு அட்டைப்பட படப்பிடிப்பில் பங்கேற்றேன். அதற்காக எனக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை சம்பளம் வழங்கப்பட்டது. அதற்கு முன்பு நான் பெற்ற சம்பளம் என்றால், சிறு வயதில் என் தந்தையின் நகத்தை வெட்டியதற்காக ரூ.500 கிடைத்தது” என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எந்த திட்டமும் தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மாடலிங் செய்து கொண்டிருந்தபோது, ஒரு பத்திரிகையின் அட்டைப்படத்தில் தனது புகைப்படத்தை பார்த்த இயக்குநர் சத்யன் அந்திக்காடு, 2003-ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தில் நடிக்க தன்னை அணுகியதாக நயன்தாரா தெரிவித்துள்ளார்.
அந்த வாய்ப்புதான் தனது முதல் திரையுலக அனுபவம் என்றும், அதன்பிறகு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக தான் உயர்ந்ததாகவும் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…