Top Cooku Doop Cooku சீசன் 2 நிகழ்ச்சி குறித்து வெங்கடேஷ் பட் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று Top Cooku Doop Cooku.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்து இருந்தது.இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.
அதற்கு வெங்கடேஷ் பட் வருகிற ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி Top Cooku Doop Cooku நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகும் என கூறியுள்ளார்.
இதனால் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.