தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக மூடப்பட்டுக் கிடந்தது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு புத்துயிர் அளித்த படங்கள் என்றால் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் தான்.
அப்படி லாக் டவுனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெளியாகி முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன அந்த படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. வலிமை – ரூ 36.17 கோடி
2. அண்ணாத்த – ரூ 34.92 கோடி
3. பீஸ்ட் – ரூ 26.40 கோடி
4. எதற்கும் துணிந்தவன் – ரூ 15.21 கோடி
5. மாஸ்டர் – ரூ 15.03 கோடி
இந்த ஐந்து படங்களில் வலிமை திரைப்படம் அதிகமான வசூலுடன் முதலிடத்தை பிடித்துள்ளது அஜித் ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.
