முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள தக்காளி மற்றும் மஞ்சள் செருமலையில் உதவுகிறது.
முக பொலிவிற்காக நாம் பல கிரீம்களை பயன்படுத்துவது உண்டு. ஆனால் ஆரோக்கியம் மிகுந்த தக்காளி மற்றும் மஞ்சளை பயன்படுத்தி நம் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.
தக்காளி மற்றும் மஞ்சள் கலவை சருமத்திற்கு பளபளப்பு சேர்ப்பது மட்டுமில்லாமல் இயற்கையான பிளீச்சாக பயன்படுகிறது.
முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் தக்காளி மற்றும் மஞ்சள் பயன்படுத்தும் போது அதிலுள்ள அழற்சி எதிர்ப்பண்புகள் முகப்பருவின் வீக்கத்தை குறைத்து சருமத்தின் அழுக்கை நீக்கி சுத்தம் செய்கிறது.
மேலும் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்கவும் சருமத்திற்கான சிறந்த எக்ஸ்போலியேட்டராகவும் இருக்கிறது. தக்காளி மஞ்சள் கலவையை தொடர்ந்து நம் முகத்தில் தடவி வருவதன் மூலம் தோல் சுருக்கங்கள் நீங்க இளமையான தோற்றத்தை நமக்கு கொடுக்கும்.