கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்களுக்கு தக்காளி ஜூஸ் மிகவும் பயன்படுகிறது.
கொலஸ்ட்ரால் நம் உடலில் அதிகரிக்கும் போது நோயையும் அதிகரித்து விடும். இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டு மாரடைப்பு காரணமாக அமைந்துவிடும். அதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது முக்கியமான ஒன்று. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் தக்காளி ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா வாங்க பார்க்கலாம்.
தக்காளி ஜூஸில் வைட்டமின்கள் தாதுக்கள் நிறைந்திருப்பதால் செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் ரத்தசோகை பிரச்சனைகள் இருந்து விடுபடவும் உதவுகிறது.
தக்காளிச் சாறில் இருக்கும் லைகோபின் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
இது மட்டும் இல்லாமல் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
எனவே கொலஸ்ட்ராலுக்கு எதிரியாக இருக்கும் தக்காளி ஜூஸ் குடித்து நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.