Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 8 – 05 – 2021

மேஷம்: இன்று மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 7

ரிஷபம்: இன்று வீண் அலைச்சல், காரிய தடை சந்திக்க நேரலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 4, 5

மிதுனம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கடகம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

சிம்மம்: இன்று எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கன்னி: இன்று வீண் அலைச்சலும் எதிலும் தடை தாமதம் உண்டாகும். மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6

துலாம்: இன்று அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

விருச்சிகம்: இன்று வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள் புதிய ஆடர் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

தனுசு: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமையுடன் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மகரம்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சல் காரிய தாமதம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5

கும்பம்: இன்று மனதில் நினைத்த காரியத்தை சிரத்தையுடன் செய்து முடிப்பீர்கள். அதனால் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்துவது நல்லது, அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 4

மீனம்: இன்று தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும். ஆன்மீக தலங்கள் சென்று வருவீர்கள். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வேலைக்குச் செல்பவர்கள் உடன் பணிபுரிபவர்களுடன் நிதானமாக பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

admin

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

9 hours ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

9 hours ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

11 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

11 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

12 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

12 hours ago