CSK player who ran out of oxygen - sonu sood organized in the ten minute
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். அவர், தனது 65 வயது அத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை என்றும், தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். ரெய்னாவின் இந்த டுவிட்டை பார்த்த நடிகர் சோனு சூட், பத்தே நிமிடத்தில் உங்கள் அத்தைக்கு ஆக்சிஜன் சென்று சேரும் என பதிலளித்திருந்தார்.
அதேபோல் சொன்னபடி சுரேஷ் ரெய்னாவின் அத்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு பத்து நிமிடத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் அனுப்பி வைத்துள்ளார் சோனுசூட். இதனையடுத்து நடிகர் சோனு சூட்டுக்கு, சுரேஷ் ரெய்னா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து தற்போது வரை ஏழை மக்கள், மாணவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என ஏராளமானோருக்கு சோனு சூட் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…