மேஷம்: இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் உண்டாகலாம். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6
ரிஷபம்: இன்று காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எந்த காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவு எடுப்பீர்கள். முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6
மிதுனம்: இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிக்கோளற்ற வீண் பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்க முயல்வதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7
கடகம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி வரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6
சிம்மம்: இன்று எந்திரங்களை கையாளும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
கன்னி: இன்று பயணங்களின் போது கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களுக்காக அலைய வேண்டி வரும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9
துலாம்: இன்று மன அமைதி உண்டாகும். நன்மை ஏற்படும். தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றுவீர்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9
விருச்சிகம்: இன்று எதையும் மனோதைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5
தனுசு: இன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 3
மகரம்: இன்று கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்களுடன் சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
கும்பம்: இன்று எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6
மீனம்: இன்று பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய கல்லீரல்…
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து…
பிரபல தென்னிந்திய நடிகை மீனா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப்…
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘துடக்கம்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.…
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…
மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…