Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 7 – 03 – 2021

மேஷம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

ரிஷபம்: இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்களுக்கு சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

மிதுனம்: இன்று எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீண் அலைச்சல் காரிய தடை ஏற்படலாம். எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கடகம்: இன்று மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்: இன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி: இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்: இன்று எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்: இன்று வீண் விவகாரங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். வீண் வழக்குகள் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு: இன்று உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்: இன்று தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மீனம்: இன்று கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 9, 3

admin

Recent Posts

ஆர்.ஜே. பாலாஜி திறந்து வைத்தார்… கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனையின் புதிய கல்லீரல் OPD மையம்!

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய கல்லீரல்…

22 hours ago

ஒரே பாடலுக்கு ரூ.1 கோடியா? கீர்த்தி சுரேஷின் சம்பளம் பேசுபொருள்!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து…

22 hours ago

“சாதி, மதத்தை அல்ல… மனிதநேயத்தைப் பெருமைப்படுங்கள்!” – நடிகை மீனாவின் பதிவு வைரல்

பிரபல தென்னிந்திய நடிகை மீனா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப்…

22 hours ago

மோகன்லால் மகள் விஸ்மயாவின் அறிமுக படம்… ‘துடக்கம்’ டிரெய்லர் வெளியீடு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘துடக்கம்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.…

23 hours ago

அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…

1 day ago

கஜினி வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்… திரையுலகம் இரங்கல்!

மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…

1 day ago